உடையார்பாளையம் பகுதியில் மழை
உடையார்பாளையம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் இடைவிடாது மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல முடியாமலும், விவசாய வேலைகளை செய்ய முடியாமலும் தவித்தனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் ஆடு, மாடுகள் மேய வழியில்லாத நிலை உள்ளது. தொடர் கனமழையால் முந்திரி, முருங்கை மற்றும் கடலை விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மழையால் உடையார்பாளையம் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து ேதங்கி நின்றது.
Related Tags :
Next Story