வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலத்தை கட்ட நடவடிக்கை


வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலத்தை கட்ட நடவடிக்கை
x
தினத்தந்தி 29 Nov 2021 2:01 PM IST (Updated: 29 Nov 2021 2:01 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலத்தை கட்ட நடவடிக்கை

அணைக்கட்டு

அணைக்கட்டு தாலுகாவில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. கந்தனேரி, கெங்கநல்லூர், ஒடுகத்தூர், குருவராஜபளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டார். 

அப்போது குருவராஜபாளையம் உத்திரகாவிரி ஆற்றின் குறுக்கே சுமார் 40 மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டிருந்த பாலம் வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விரைவில் பாலம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். 

நேற்று அணைக்கட்டு வட்டாரத்தில் நடந்த கொரோனா தடுப்புசி முகாம்களில் 2,809 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். விடுபட்டவர்கள் முகாம்களிலும், அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் கூறினார். இந்த ஆய்வின்போது அணைக்கட்டு தாசில்தார் பழனி, வருவாய் ஆய்வாளர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உமா மகேஸ்வரி நீலமேக ராஜா, செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story