ஓசூரில் பரபரப்பு கர்ப்பிணி வயிற்றிலேயே குழந்தை இறந்ததால் பரபரப்பு மருத்துவமனை ஊழியர்களிடம் உறவினர்கள் வாக்குவாதம்


ஓசூரில் பரபரப்பு கர்ப்பிணி வயிற்றிலேயே குழந்தை இறந்ததால் பரபரப்பு மருத்துவமனை ஊழியர்களிடம் உறவினர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 29 Nov 2021 2:02 PM IST (Updated: 29 Nov 2021 2:02 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனை ஊழியர்களிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர்:
ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனை ஊழியர்களிடம், உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கர்ப்பிணி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவருடைய மனைவி ஜமீலா கான், காதல் திருமணம் செய்த இவர் கருவுற்ற நாள் முதல் ஓசூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு வந்தார். நிறைமாத கர்ப்பிணியான ஜமீலாகானுக்கு, கடந்த 26-ந்தேதி பிரசவத்திற்கான நாளாக டாக்டர்களால் குறிக்கப்பட்டது. 
இந்த நிலையில், தலை பிரசவம் என்பதால் கடந்த 24-ந் தேதி அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு குழந்தை வயிற்றிலேயே உயிரிழந்ததாக மருத்துவக்குழுவினர் சிரஞ்சீவி மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் கூறி உள்ளனர். தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்து ஆண் குழந்தையை மருத்துவக்குழுவினர் எடுத்துள்ளனர்.
வாக்குவாதம்
இதனால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர், நர்சுகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நாள் முதல், டாக்டர்கள் யாரும் ஜமீலா கானை பரிசோதிக்கவில்லை. முறையான சிகிச்சை வழங்கவில்லை. நர்சுகளின் தொலைபேசி வழிகாட்டுதல்படி, தூய்மைப்பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story