கோவில்பட்டி யில் வேனில் கடத்திய 2,500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்


கோவில்பட்டி யில் வேனில் கடத்திய 2,500 கிலோ  ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்
x
தினத்தந்தி 29 Nov 2021 5:04 PM IST (Updated: 29 Nov 2021 5:04 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி யில் வேனில் கடத்திய 2,500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் வேனில் கடத்திய 2,500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வேனில் இருந்த 2பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில், தனிப்படை போலீஸ் ஏட்டு அருண் விக்னேஷ் மற்றும் போலீசார் சங்கரலிங்கபுரம் விலக்கு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த லோடு வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
2 பேர் சிக்கினர்
இதையடுத்து, வாகன ஓட்டுனர் இலுப்பையூரணியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் மற்றும் வாகனத்தில் இருந்த வள்ளுவர் நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் நாகராஜ் (வயது 34) ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவில்பட்டி பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தி, கயத்தாறு அருகே உள்ள காப்புலிங்கம் பட்டியைச் சேர்ந்த மகாராஜா என்பவரிடம் கொடுக்க கொண்டு செல்வதாகவும், அவர் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து, கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதும் தெரியவந்தது.
போலீசார் தீவிர விசாரணை
இதையடுத்து, வேனில் இருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 50 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். வேனுடன் ரேஷன் அரிசியையும், சிக்கிய இருவரையும் கோவில்பட்டி கிழக்கு போலீசார், தூத்துக்குடி உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த போலீசார் பிடிபட்டுள்ள 2 பேரிடமும் ரேஷன் அரிசியை எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story