மழைநீரில் வழுக்கி விழுந்த தலைமை செயலக ஊழியர் மின்சாரம் தாக்கி பலி


மழைநீரில் வழுக்கி விழுந்த தலைமை செயலக ஊழியர் மின்சாரம் தாக்கி பலி
x
தினத்தந்தி 29 Nov 2021 5:18 PM IST (Updated: 29 Nov 2021 5:20 PM IST)
t-max-icont-min-icon

நேற்று காலை முரளி கிருஷ்ணன் வீட்டு வளாகத்தில் தேங்கி கிடந்த மழைநீரில் நடந்து செல்லும்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்து விட்டார். இரும்பு கதவை பிடித்தபோது அவரை மின்சாரம் தாக்கியது.

சென்னை சூளை சாலைத் தெருவைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன் (வயது 45). சென்னை தலைமை செயலகத்தில் செய்தித்துறையில் வேலைப்பார்த்து வந்தார். இவருடைய மனைவி சுஜாதா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் இவரது வீட்டு வளாகத்தில் மழைநீர் தேங்கி இருந்தது. நேற்று காலை முரளி கிருஷ்ணன் வீட்டு வளாகத்தில் தேங்கி கிடந்த மழைநீரில் நடந்து செல்லும்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்து விட்டார். அருகில் இருந்த இரும்பு கதவை பிடித்து எழுந்திருக்க முயன்றார். ஆனால் அங்குள்ள மின்பெட்டியில் இருந்து அவரது வீட்டுக்கு செல்லும் மின்வயர் இரும்பு கதவில் உரசியபடி சென்றதால், கதவில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. 

இது தெரியாமல் முரளி கிருஷ்ணன், இரும்பு கதவை பிடித்தபோது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை, அவரது உறவினர்கள் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், முரளி கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story