ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி கிராம மக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்தூத்துக்குடி, நவ.30- தூத்துக்குடி அருகே உள்ள டி.குமாரகிரி, பண்டாரம்பட்டி கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் தூத்துக்குடி திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம் பகுதிகளை சேர்ந்த மீனவ பெண்கள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் செந்தில்ராஜிடம் தனித்தனியாக மனு கொடுத்தனர். அந்த மன

x
தினத்தந்தி 29 Nov 2021 6:45 PM IST (Updated: 29 Nov 2021 6:45 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி கிராம மக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள டி.குமாரகிரி, பண்டாரம்பட்டி கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் தூத்துக்குடி திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம் பகுதிகளை சேர்ந்த மீனவ பெண்கள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் செந்தில்ராஜிடம் தனித்தனியாக மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்படுவதாக தவறான கருத்தை சிலர் பதிய வைத்தனர். இப்போது அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தூத்துக்குடி நகரம் மாசடைவதற்கு ஸ்டெர்லைட் ஆலை காரணம் இல்லை என கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் உண்மையான நிலையை நாங்கள் அறிந்து கொண்டோம்.
தவறான தகவல்களை பரப்பியதால் கடந்த 3½ ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வேலையை இழந்து மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாசடைவற்கு ஸ்டெர்லைட் ஆலை காரணம் இல்லை என்பது உறுதியாகி உள்ளதால் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் எங்கள் பகுதியை சேர்ந்த பலர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். எனவே, ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Next Story