பிச்சாட்டூர் அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
பிச்சாட்டூர் அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணி அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ராமகிரி, சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, சிட்றபாக்கம் பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்க கடலில் கலக்கிறது.
இந்த நிலையில் 2 நாட்களாக பிச்சாட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனை கருத்தில் கொண்டு நேற்று மாலை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் அதிகரிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் மட்டும்தான் திறக்கப்பட்டு வந்தது.
Related Tags :
Next Story