அரசு பஸ் மீது விழுந்த ராட்சத மரம்


அரசு பஸ் மீது விழுந்த ராட்சத மரம்
x
தினத்தந்தி 29 Nov 2021 2:59 PM GMT (Updated: 29 Nov 2021 2:59 PM GMT)

கொடைக்கானல் மலைப்பாதையில் அரசு பஸ் மீது ராட்சத மரம் விழுந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பெரும்பாறை: 

பஸ் மீது விழுந்த ராட்சத மரம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் நேற்று காலை 6.15 மணிக்கு தாண்டிக்குடியில் இருந்து அரசு பஸ் ஒன்று வத்தலக்குண்டு நோக்கி புறப்பட்டது. பஸ்சை பட்டிவீரன்பட்டியை சேர்ந்த கருப்பையா ஓட்டினார். கண்டக்டராக ஞானசேகரன் இருந்தார். அந்த பஸ் பட்டங்காடு, கொடலங்காடு வழியாக ராஜாகானல் என்னுமிடத்தில் மலைப்பாதையில் வந்து ெகாண்டிருந்தது. அப்போது சாைலயோரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று திடீரென்று பஸ்சின் மீது விழுந்தது. 

பயணிகள் உயிர் தப்பினர்
மரம் விழுந்த சத்தம் கேட்டு பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் ‘அய்யோ, அம்மா’ என அலறினர்.  உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ்சின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்த பயணி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பஸ்சின் மேற்கூரை சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த 12 பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

இது குறித்து தகவல் அறிந்த காமனூர் ஊராட்சி மன்றத் தலைவர் மணிரஞ்சிதம் சதாசிவம் தலைமையில் அப்பகுதி மக்கள் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பஸ்சின் மேற்கூரை மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story