கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது
ஆரணி நகரில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
ஆரணி
ஆரணி நகரில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலையில் கனமழை பெய்தது.
முன்னதாகவே சூரிய குளம் நிரம்பி உபரி நீர் கால்வாய் வழியாக பி.குட்டை, பையூர் பெரிய ஏரிக்கு செல்லக் கூடிய நிலையில் வழியிலுள்ள 19-வது வார்டு வடியராஜா தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
இதனால் கடந்த ஒருவாரமாக குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் தேங்கியது. இந்த நிலையில் இன்று பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வீடுகளுக்குள் தேங்கிய தண்ணீரை வெளியேற்றினர்.
இதுகுறித்து முன்னாள் நகர சபை உறுப்பினர்கள் வி.டி.அரசு, யுவராஜ் ஆகியோர் ஆரணி நகராட்சி ஆணையாளர் பி. தமிழ்செல்வி, நகராட்சி பொறியாளர் டி.ராஜவிஜயகாமராஜ் ஆகியோருக்கும் தகவல் தெரிவித்து குடியிருப்பு பகுதிகளில் மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் இதே போல ஆரணி அடுத்த அக்ராபாளையம் குளத்துமேட்டு தெருவிலும் குடியிருப்புப் பகுதியில் தெரு முழுவதும் மழைநீர் தேங்கி பாதிப்புக்குள்ளானது.
Related Tags :
Next Story