உண்டியல் காணிக்கை ரூ1 கோடியே 21 லட்சம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ1 கோடியே 21 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ1 கோடியே 21 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கடந்த மாதம் 10-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கி இன்று மகா தீப தரிசனம் நிறைவு பெற்றது.
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாட்களை தவிர கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து சாமி தாிசனம் செய்தனர். மேலும் ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்.
இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்கள் ஆகியவற்றில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
இதில் ரூ.1 கோடியே 21 லட்சத்து 46 ஆயிரத்து 133-ம், 243 கிராம் தங்கமும், 979 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டது.
Related Tags :
Next Story