டாஸ்மாக் கடைகள் முன்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் கடைகள் முன்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயலாளர் மணிகண்டன், மாவட்ட கவுரவ தலைவர் மணிகண்டன், துணை தலைவர் சரவணமுருகன், செயற்குழு உறுப்பினர்கள் சாத்தப்பன், ஆரோக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கேரளாவை போன்று பணியை திருத்தி அமைக்க வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை டாஸ்மாக் பணியாளர்களுக்கும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதேபோல் வேடசந்தூரில் ஏ.ஐ.டியூ.சி. டாஸ்மாக் பணியாளர் சங்க வேடசந்தூர் தாலுகா தலைவர் ரஞ்சித்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் 60 இடங்களில் டாஸ்மாக் மதுக்கடை முன்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story