கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2021 10:17 PM IST (Updated: 29 Nov 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் மதபோதகர் பியூலாசெல்வராணி வியாபாரிகளை இழிவுவாக பேசியதால் தமிழ்நாடு முழுவதும் வியாபாரிகள் சார்பில் அனைத்து போலீஸ்நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர்  கைது செய்து செய்யப்படவில்லை. 
இதற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூர் மாவட்டத்தில் கொங்கு மண்டல வியாபாரிகள் சார்பில் திருப்பூர் ரெயில்நிலையம் அருகில் குமரன் சிலை முன்பு மாவட்ட தலைவர் மகிஷா ரமேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் விஷ்வக் மணிகண்டன், துணை செயலாளர் ராமர், கவுரவத்தலைவர் மாரியப்பன், இணை  செயலாளர் மாரிராஜன், மகளிர் அணி தலைவி ஆனந்தி, செயலாளர் முருகானந்தி, பகுதி செயலாளர்கள் கணேஷ்குமார், சிவசங்கர், கண்ணன், ஆமோஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story