வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு


வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு
x
தினத்தந்தி 29 Nov 2021 10:44 PM IST (Updated: 29 Nov 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

வேலூர்

வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்கள் மற்றும் ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரி உள்ளிட்ட வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. 

அதேபோன்று வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள் மொத்தம் மற்றும் சில்லரை விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும். 

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நேதாஜி மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து வெகுவாக குறைந்தது.

 அதன்காரணமாக அனைத்து காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளன.

 அதிகபட்சமாக கத்தரிக்காய் சில்லரை விலையில் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் கிலோ ரூ.140-க்கும், தக்காளி ரூ.60-க்கும், பீன்ஸ், கேரட் ரூ.80-க்கும், உருளைகிழங்கு ரூ.30-க்கும், வெங்காயம் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இதைத்தவிர அனைத்து காய்கறிகளின் முதல்தரம் ரூ.10 முதல் ரூ.15 வரை கூடுதலாக விற்கப்பட்டது. மளிகை மற்றும் சில்லரை விற்பனை காய்கறி கடைகளில் இவற்றை விட கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனையானது. 

தொடர் மழையின் காரணமாக காய்கறிகள் குறைந்தளவே நேதாஜி மார்க்கெட்டுக்கு வருகின்றன. அதனால் அவற்றின் விலை அதிகமாக காணப்படுகிறது என்று காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.

Next Story