ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த மேலப்புலம்புதூர் ஊராட்சியில் மேட்டுத்தெரு, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழையினால் கசக்கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.
Related Tags :
Next Story