ஆக்கிரமித்து கட்டப்பட்ட 24 வீடுகள் இடித்து அகற்றம்
ஆக்கிரமித்து கட்டப்பட்ட 24 வீடுகள் இடித்து அகற்றம்
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் இரு பகுதியிலும் பல ஆண்டுகளாக ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதில் பல வீடுகள் தண்ணீர் செல்லும் பாதையின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகளில் வெள்ளம் புகுவதும் அங்கு வசிக்கும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதும் வழக்கமாக நடந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக கவுண்டன்ய மகாநதி ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளதால் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து கணக்கெடுப்பு நடத்தியதில் 1,282 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில் முதல்கட்டமாக ஆற்றில் தண்ணீர் செல்லும் பாதையில் குறுக்கே உள்ள வீடுகளை இடிக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று நீர்வள ஆதாரத் துறை வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ரமேஷ் மேற்பார்வையில், குடியாத்தம் உதவி செயற்பொறியாளர் குணசீலன், உதவி பொறியாளர் தமிழ்ச்செல்வன், பணி ஆய்வாளர் சிவாஜி ஆகியோர் சக ஊழியர்களுடன் பொக்லைன் எந்திரம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் காமராஜர் பாலம் அருகே கவுண்டன்ய மகாநதி ஆற்றின் குறுக்கே தண்ணீர் செல்லும் பாதையில் கட்டப்பட்டிருந்த 24 வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர், இரண்டு கடைகளையும் இடித்து அகற்றினர்.
Related Tags :
Next Story