தொடர்மழையினால் நிரம்பிய கண்மாய்கள்


தொடர்மழையினால் நிரம்பிய கண்மாய்கள்
x
தினத்தந்தி 30 Nov 2021 12:44 AM IST (Updated: 30 Nov 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

தொடர்மழையினால் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பின.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
தொடர்மழையினால் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பின. 
தொடர்மழை 
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் வாழை குளம் கண்மாய், அமுதாங்குளம் கண்மாய், வேப்பங்குளம் கண்மாய், வாலாங்குளம் கண்மாய் ஆகியவை நிரம்பி மறுகால் பாய்கின்றன.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவின் பேரில் துணை ஆணையர் சிவகுமார், தாசில்தார் ராமசுப்ரமணியன், துணை தாசில்தார் பாலகிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலர்கோதண்டராமன், தேர்தல் பிரிவு தாசில்தார் சசிகலா ஆகியோர் மம்சாபுரம் பகுதிக்கு சென்று நீர் நிரம்பி மறுகால் பாயும் கண்மாய் மற்றும் குளங்களை பார்வையிட்டனர்.
நீர்வரத்து அதிகரிப்பு 
தொடர்மழையினால் கண்மாய் மற்றும் குளங்கள் நிறைந்து உள்ளன. தொடர்ச்சியாக நீர் வரத்தும் அதிகமாக உள்ளது.
 எனவே பொதுமக்கள் கண்மாய், குளங்கள் பக்கம் செல்ல வேண்டாம். சிறிய குழந்தைகளை அந்த பகுதிக்கு அழைத்து செல்ல வேண்டாம் என அதிகாரிகள் கூறினர். 

Next Story