எருமப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தங்கமணி எம்.எல்.ஏ. பேட்டி


எருமப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தங்கமணி எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 30 Nov 2021 12:52 AM IST (Updated: 30 Nov 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தங்கமணி எம்.எல்.ஏ. பேட்டி

எருமப்பட்டி:
எருமப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தங்கமணி எம்.எல்.ஏ. கூறினார். 
தேர்தல் ஒத்திவைப்பு
எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்த வரதராஜன் கொரோனாவால் இறந்ததை தொடர்ந்து தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் 22-ந் தேதி நடப்பதாக இருந்தது. பின்னர் தேர்தல் பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தேர்வு ஆணையம் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் நவம்பர் 29-ந் ேததி நடத்தப்படும் என அறிவித்தது. இதையொட்டி கடந்த வாரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒவ்வொரு ஒன்றியக்குழு உறுப்பினர்களிடமும் தேர்தல் நடத்தப்படும் நோட்டீஸ் வழங்கி தெரிவிக்கப்பட்டது. 
இந்த நிலையில் நேற்று திடீரென ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக ஒன்றியக்குழு அலுவலகம் முன்பு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றார். இதை அறிந்த அ.தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்தல் ஏன் ஒத்திவைக்கப்பட்டது? என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்பதற்காக வந்தனர். 
அதிகார துஷ்பிரயோகம்
ஆனால் அங்கு அதிகாரிகள் யாரும் பணிக்கு வராததால் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அலுவலக மேலாளரிடம் மனு கொடுத்தனர். இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. வந்தார். 
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது அதிகார துஷ்பிரயோகம் ஆகும். இதுபோல தி.மு.க.வினர் நாமக்கல், மோகனூர், புதுச்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர்களை மிரட்டி தி.மு.க.வில் இணைத்துள்ளனர். 
வழக்கு
மேலும் நேற்று முன்தினம் ஊராட்சிக்குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்களை அனுப்பி போட்டோ எடுத்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வீட்டில் இல்லை என உதவி கலெக்டரிடம் அறிக்கை கொடுத்து அதன் பேரில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ெதரிகிறது. எனவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும். 
மேலும் தேர்தல் ஒத்திவைப்பு குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பேசி விட்டு கட்சியினரை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 10 ஒன்றியக்குழு உறுப்பினர்ள் எங்கள் பக்கம் உள்ளதால் எப்போது தேர்தல் நடந்தாலும் அதில் அ.தி.மு.க. வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அங்கிருந்து சென்றனர்.

Next Story