ஆபத்தான கட்டிடம் இடித்து அகற்றம்


ஆபத்தான கட்டிடம் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 30 Nov 2021 12:53 AM IST (Updated: 30 Nov 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

ஆபத்தான கட்டிடம் இடித்து அகற்றம்

திருச்சி, நவ.30-
திருச்சி புத்தூர் தெற்கு முத்துராஜா தெருவில் உள்ள முருகேசன் என்பவருக்குச் சொந்தமான பயன்பாட்டில் இல்லாத வீடு பாழடைந்து இடிந்துவிழும் நிலையில் இருந்தது. இதுபற்றி மாநகராட்சிக்கு வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் நேற்று மாநகராட்சி செயற்பொறியாளர் சிவபாதம், திருச்சி மேற்கு தாசில்தார் ரமேஷ் ஆகியோர் மேற்பார்வையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த கட்டிடத்தை இடித்து அகற்றினர். இதுபோன்று பிறருக்கு அபாயத்தை ஏற்படுத்தக் கூடிய மிகவும் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்களை அதன் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றவில்லை என்றால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அவை இடித்து அகற்றப்படும் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story