பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக ஜீப்பில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் டிரைவர் உள்பட 2 பேர் கைது


பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக ஜீப்பில் கடத்தி வரப்பட்ட  புகையிலை பொருட்கள் பறிமுதல் டிரைவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Nov 2021 12:53 AM IST (Updated: 30 Nov 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக ஜீப்பில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூர்:
ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் ரோந்து சென்றனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி ஜீப் ஒன்று வந்தது. போலீசார் அந்த ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புகையிலை பொருட்கள் 212 கிலோ இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக டிரைவர் மற்றும் உடன் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் கள்ளகுறிச்சி மாவட்டம் சங்காபுரம் தாலுகா செப்பந்தநல்லூர் பகுதியை சேர்ந்த குப்புசாமி (39), குபேந்திரன் (22) என்பதும், பெங்களூருவில் இருந்து சங்காபுரத்திற்கு புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலம் ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள், ஜீப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story