7-ந் தேதி விவசாயிகள் மறியல் போராட்டம்
7-ந் தேதி விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்
மணமேல்குடி
மணமேல்குடி பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் சென்ற ஆண்டிற்கான பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கவில்லை என கூறி பல்வேறு கட்டமாக மணமேல்குடி பகுதி விவசாயிகள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மணமேல்குடி வேளாண்மை அலுவலகத்தில் சென்னை இன்சூரன்ஸ் அதிகாரிகள் தலைமையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் வேளாண்மை அலுவலகம் முன் தரையில் அமா்ந்து கோஷமிட்டனர். மேலும், இன்சூரன்ஸ் தொகை கேட்டு வருகிற 7-ந் தேதி சாலைமறியல் செய்ய போவதாக கூறி கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story