தென்காசியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் தர்ணா


தென்காசியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 30 Nov 2021 1:14 AM IST (Updated: 30 Nov 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி:

குறை தீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா முன்னிலை வகித்தார். அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் பலர் இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கொடுத்தனர். மொத்தம் 648 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்கள் தர்ணா
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூரை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். சுமார் 14 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வரும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேலும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை ஆகியவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கணபதி முன்னிலை வகித்தார். மாதர் சங்க நிர்வாகி காளியம்மாள், முருகையா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தென்காசி எம்.எம்.ஏ. நகர் உச்சிமாகாளி அம்மன் கோவில் 1-ம் தெரு பொதுமக்கள், வாறுகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். 

Next Story