சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்களை உதவி கலெக்டர் ஆய்வு


சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்களை உதவி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Nov 2021 1:33 AM IST (Updated: 30 Nov 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் பள்ளிக்கூட வாகனங்களை உதவி கலெக்டர் ஆய்வு நடத்தினார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள தனியார் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாகனங்களை உதவி கலெக்டர் அஸ்ரத்பேகம், வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜன், சங்கரன்கோவில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் யேசுதாசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தீயணைப்பு கருவிகள் சரியாக இல்லாத வாகனத்தில் அதை சரிசெய்ய உதவி கலெக்டர் அஸ்ரத்பேகம் உத்தரவிட்டார். மொத்தம் 52 வாகனங்களை ஆய்வு செய்து அவற்றை தொடர்ந்து இயக்க தகுதி சான்று வழங்கப்பட்டது.

Next Story