மாவட்ட செய்திகள்

பட்டாசு சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்பது பொய் தோற்றம் + "||" + Demonstration

பட்டாசு சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்பது பொய் தோற்றம்

பட்டாசு சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்பது பொய் தோற்றம்
பட்டாசால் தான் சுற்றுச்சூழல் பாதிக்கிறது என்ற பொய் தோற்றத்தை உருவாக்கி உள்ளனர் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மகேந்திரன் பேட்டி அளித்தார்.
சிவகாசி, 
பட்டாசால் தான் சுற்றுச்சூழல் பாதிக்கிறது என்ற பொய் தோற்றத்தை உருவாக்கி உள்ளனர் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மகேந்திரன் பேட்டி அளித்தார்.
ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. பட்டாசு-தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாது காக்க உரிய சட்ட திருத்தம் செய்து பட்டாசு தொழில் நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சமுத்திரம் தலைமை தாங்கினார். சிவகாசி வட்டார செயலாளர் ஜீவா, காலைவாசகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சி.மகேந்திரன் சிறப்புரையாற்றினார்.
பாதிப்பு இல்லை
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  உலகத்திலேயே பட்டாசு தொழிலை கலையாக வளர்த்தவர்கள் சீனர்களும், இந்தியர்களும் தான். அதிலும் குறிப்பாக தமிழர்கள் தான். பேரியம் நைட்ரேட் பயன் படுத்தினால் பெரிய ஆபத்து எதுவும் நிகழ போவது இல்லை. யாரோ ஒரு சிலர் உரிய ஆய்வுகளை மேற்கொள் ளாமல் பேரியம் நைட்ரேட் வேதிப் பொருளால் பாதிப்பு என்கிறார்கள். அதை தடை செய்ய வேண்டும் என்கிறார்கள். அதே போல் சரவெடிகளால் எவ்வித பாதிப்பும் ஏற்பட போவது இல்லை. மாசுகளை உண் டாக்கும் பல தொழிற்சாலைகள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 
அதை தடை செய்ய முடியுமா? பட்டாசால் தான் சுற்றுச்சூழல் பாதிக்கிறது என்ற பொய் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். 
7 லட்சம் பேர்
யாரோ சிலர் போடப்பட்ட வழக்கால் இங்கு 7 லட்சம் தொழிலாளர்ளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் பட்டாசு தொழிலோடு தொடர்புள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரின் வாழ்வாதாரமும் அழிந்து நாசமாகிறது. 
. இவ்வாறு அவர் கூறினார். 
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, முன்னாள் எம்.பி. லிங்கம், கூடலிங்கம், சுரேஷ்குமார், இக்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
சிங்கம்புணரியில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் நடந்தது.
2. ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. சாலை பராமரிப்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு பணியாளர் சங்கத்தினர் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. தமிழ் புலிகள் கட்சி ஆர்ப்பாட்டம்
நெல்லையில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.