நண்பருக்கு கொலைமிரட்டல் விடுத்த தொழிலாளி கைது


நண்பருக்கு கொலைமிரட்டல் விடுத்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 30 Nov 2021 1:41 AM IST (Updated: 30 Nov 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

நண்பருக்கு கொலைமிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவருடைய நண்பரான உகந்தான்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் (54) என்பவரும் சேர்ந்து தினமும் முருகனின் மோட்டார் சைக்கிளில் கட்டிட வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் முருகனுக்கு வேறு வேலை இருந்ததால் கணேசனை அழைக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால முருகன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்த கணேசன் தனது வீட்டு முன்பாக முருகன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அவரை வழிமறித்து அவதூறாக பேசி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முருகன் சீதபற்பநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் கணேசன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story