150 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின


150 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
x
தினத்தந்தி 30 Nov 2021 1:43 AM IST (Updated: 30 Nov 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

150 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி ஊராட்சியை சேர்ந்த மூர்த்தியான் கிராமத்தில் சுமார் 350 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பு சம்பா பருவத்திலும் விவசாயிகள் நடவு பணிகளை நிறைவு செய்து உள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகயைில், வயல் பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததே தற்போது நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியதற்கு காரணம். வரும் வாரங்களிலும் கனமழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருப்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. ஏற்கனவே வெள்ளநீர் வடியாமல் இருக்கும் வயல்வெளிகளில் தொடர் மழை பெய்தால் இன்னும் கூடுதலான நிலப்பரப்பில் நெல்வயல்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.
மூர்த்தியான் பகுதியில் உள்ள பெரிய ஏரியும் அதன் முழு கொள்ளளவை எட்டி விட்டதால் அதில் இருந்தும் தண்ணீர் வயல்வெளி பகுதிக்குள் புகுந்து வருகிறது. எனவே வெள்ள நீர் வெளியேறுவதற்கு உள்ள நீர் வழித்தடங்களை சரி செய்து வயல்களில் தண்ணீர் தேங்காமல் வெளியேற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story