பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் முற்றுகை போராட்டம்


பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 30 Nov 2021 1:51 AM IST (Updated: 30 Nov 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்

சேலம்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பா.ஜனதா கட்சியின் எஸ்.சி. அணி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எஸ்.சி. அணி மாநகர் மாவட்ட தலைவர் மகிழன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம், கிழக்கு மாவட்ட தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசை போன்று மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, ‘மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து உள்ளது. இதை மற்ற மாநிலங்கள் நடைமுறைப்படுத்தி உள்ளன. தமிழக அரசு நடைமுறைப்படுத்தாததற்கு சரியான காரணம் கூற வேண்டும். மேலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வரை பா.ஜனதாவின் போராட்டம் தொடரும்’ என்றார். இதில் எஸ்.சி. அணி பொதுச்செயலாளர் ராஜேந்திரன் உள்பட பா.ஜனதா கட்சியினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story