மல்லூரில் ஏரியில் மூழ்கி வாலிபர் பலி குளிக்க சென்ற போது பரிதாபம்


மல்லூரில்  ஏரியில் மூழ்கி வாலிபர் பலி குளிக்க சென்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 30 Nov 2021 1:51 AM IST (Updated: 30 Nov 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

மல்லூரில் ஏரியில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியானார்.

பனமரத்துப்பட்டி
குளிக்க சென்ற வாலிபர்
சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் கவுதம் (வயது 21). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் கவுதம் நேற்று மாலை 3 மணியளவில் மல்லூர் அருகே உள்ள ஓட்டேரி ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது அவர் ஏரியில் உள்ள சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார். 
இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் கத்தி கூச்சலிட்டு உள்ளனர். மேலும் சேலம் தீயணைப்பு படையினருக்கும், மல்லூர் போலீசாருக்கும் அவர்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கவுதமை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். 
உடல் மீட்பு
ஆனால் அதற்கு முன்பே கவுதம் நீரில் மூழ்கி இறந்து விட்டார். இதையடுத்து கவுதமின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். மேலும் மல்லூர் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story