மாநில செய்திகள்

அபுதாபியில் இருந்து சென்னைக்கு காபி போடும் கருவியில் மறைத்து கடத்திய ரூ.1 கோடி தங்கம் பறிமுதல் + "||" + 1 crore gold smuggled from Abu Dhabi to Chennai hidden in coffee grinder

அபுதாபியில் இருந்து சென்னைக்கு காபி போடும் கருவியில் மறைத்து கடத்திய ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

அபுதாபியில் இருந்து சென்னைக்கு காபி போடும் கருவியில் மறைத்து கடத்திய ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் அபுதாபியில் இருந்து காபி போடும் கருவியில் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 590 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு அபுதாபியில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 24 வயது வாலிபர், விமான நிலையத்தில் இருந்து அவசரமாக வெளியே செல்ல முயன்றார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர்.


ரூ.1 கோடி தங்கம்

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் காபி போடும் கருவி இருந்தது. சந்தேகத்தின்பேரில் அந்த கருவியை பிரித்து பார்த்தபோது அதில் சிலிண்டர் வடிவில் தங்க கட்டியை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 590 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த வாலிபரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த தங்கத்தை அவர் யாருக்காக கடத்தி வந்தார்? என விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.37 லட்சத்து 88 ஆயிரம் மதிப்புள்ள 852 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2. சென்னை விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.37 லட்சத்து 88 ஆயிரம் மதிப்புள்ள 852 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3. பஞ்சாப் சட்டசபை தேர்தல்; ரூ.40.31 கோடி மதிப்பிலான சட்டவிரோத பொருட்கள் பறிமுதல்
பஞ்சாபில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில் ரூ.40.31 கோடி மதிப்பிலான சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
4. கோவை: நகையில் போலி 916 முத்திரையிடும் ஆசாமிகள் பிடிபட்டனர் - நகைகள் பறிமுதல்
கோவை மாவட்டத்தில் நகையில் போலி 916 முத்திரையிடும் ஆசாமிகள் பிடிபட்டனர். அவர்களிடம் ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
5. சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம்-வெளிநாட்டு பணம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கடத்த முயன்ற ரூ.1 கோடி தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் சிக்கியது.