வீரவநல்லூர் அருகே விவசாயி கொலையில் 3 பேர் கைது


வீரவநல்லூர் அருகே விவசாயி கொலையில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 Nov 2021 4:06 AM IST (Updated: 30 Nov 2021 4:06 AM IST)
t-max-icont-min-icon

விவசாயி கொலையில் 3 பேர் கைது

சேரன்மாதேவி:
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளி சித்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). விவசாயியான இவர் மாடுகளை வளர்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, இரவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் ஆறுமுகத்தை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆறுமுகத்தை மர்மநபர்கள் கொலை செய்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக வெள்ளாங்குளியைச் சேர்ந்த மாரிசெல்வம் (20), மாசானம் (20), கங்காதரன் (21) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவான சிலரை வலைவீசி தேடி வருகின்றனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story