வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சிறுத்தை பலி
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சிறுத்தை பலி
அம்பை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று காலை அம்பை ஊர்க்காடு தாமிரபரணிஆற்று கரையோரம் இறந்த நிலையில் சிறுத்தை ஒன்று கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகபிரியா உத்தரவின் பேரில் வனக்காவலர்கள் விரைந்து சென்று இறந்து கிடந்த சிறுத்தையை எடுத்துச் சென்று தேசிய புலிகள் காப்பக இயக்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சிங்கம்பட்டி காப்புக்காடு பகுதியில் எரியூட்டினர். அந்த சிறுத்தை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சரியான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story