தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
தெரு மின்விளக்கு எரியுமா?
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி ஜோதிநகர் வள்ளலார் தெருவில் 20 நாட்களாக தெரு மின்விளக்கு எரியவில்லை. இரவில் சிறுவர், சிறுமிகள், முதியோர் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். மின்கம்பம் உள்ள இடம் தெருவின் திருப்பம் ஆகும். அங்கு, இரவில் மின் விளக்கு எரியாததால் எதிர் எதிரே வாகனங்கள் வந்து மோதி கொள்ளும் சம்பவம் நடக்கிறது. தெரு மின் விளக்கை சம்பந்தபட்ட அதிகாரிகள் எரிய விடுவார்களா?
-சசிமோகன், அரக்கோணம்.
வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட பிஞ்சாரி தெரு, பெரிய மசூதி தெருக்களில் பல மாதங்களாக தெரு மின் விளக்குகள் எரியவில்லை. இரவில் மசூதிக்கு தொழுகைக்கு செல்வோர் சிரமப்படுகிறார்கள். பலமுறை மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-என்.அசோக்குமார், வாலாஜா.
குண்டும் குழியுமான சாலையால் விபத்து
வேலூர் மாநகராட்சி 28-வது வார்டு பி.எஸ்.எஸ்.கோவில் தெருவில் மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. நேற்று காலை சரக்கு வேன் ஒன்று பாரம் ஏற்றி வந்தது. திடீரெனச் சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு வர முடியவில்லை. சாலையை சரி செய்ய வேண்டும் என்றும், மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடை வியாபாரிகள் தொடர்ந்து 2 மாதமாக வலியுறுத்தி வருகிறோம். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுபாஷ், வேலூர்.
கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை
கீழ்பென்னாத்தூரில் அவுலூர்பேட்டை செல்லும் சாலையில் காவல் துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் 3 மாதமாக செயல்படவில்லை. மாவட்ட காவல் துறை நிர்வாகம் நடவடிக்ைக எடுத்து கண்காணிப்பு கேமராக்களை செயல்பட வைக்க வேண்டும்.
-எஸ்.பூங்காவனம், கீழ்பென்னாத்தூர்.
ேதங்கிய மழைநீரை வடிய வைப்பார்களா?
ராணிப்பேட்டை மாவட்டம் அன்வர்த்திகான்பேட்டையில் உள்ள காமராஜர் சிலை அருகில் சிறிய தெரு குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. அருகில் உள்ள மின்கம்பங்கள் நீரில் மூழ்கி உள்ளது. லேசாக மழை பெய்தாலும் அப்பகுதியில் மழைநீர் அதிகளவில் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எங்கள் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜி.மணிகண்டன், அன்வர்த்திகான்பேட்டை.
Related Tags :
Next Story