மாவட்ட செய்திகள்

சிலிண்டருடன் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த கியாஸ் ஏஜென்சி ஊழியர் சாவு + "||" + Death of a gas agency employee who fell from a staircase with a cylinder

சிலிண்டருடன் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த கியாஸ் ஏஜென்சி ஊழியர் சாவு

சிலிண்டருடன் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த கியாஸ் ஏஜென்சி ஊழியர் சாவு
சிலிண்டருடன் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த கியாஸ் ஏஜென்சி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நன்மங்கலம் பாரத் தெருவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 52). இவர், கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர்களை டெலிவரி கொடுக்கும் ஊழியராக பணியாற்றி வந்தார்.

கடந்த 26-ந் தேதி பெரும்பாக்கம் நேசமணி நகரில் மாடியில் உள்ள ஒரு வீட்டுக்கு கியாஸ் சிலிண்டர் டெலிவரி கொடுக்க சென்றார். மாடிப்படியில் ஏறியபோது, தோளில் வைத்திருந்த சிலிண்டருடன் கால் தவறி கீழே விழுந்துவிட்டார். தோளில் இருந்த சிலிண்டர் அவரது தலை, கழுத்து பகுதியில் விழுந்ததால் படுகாயம் அடைந்த பிரான்சிஸ், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.