குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர்
குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கண்ணகி (49). கணவன்-மனைவி இடையே நேற்று முன்தினம் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், கத்தியால் மனைவி கண்ணகியின் வயிற்றில் குத்தினார்.
இதில் காயம் அடைந்த அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு காயத்துக்கு தையல் போடப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று மாலை கண்ணகி திடீரென மரணமடைந்தார்.
இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, செல்வராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story