ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
x

ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள சாயர்புரம் நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 25). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர்  போலீஸ் இன்ஸ்பெக்டர் லெட்சுமிபிரபா போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தார்.

Next Story