திருத்தணி அருகே ஏரி உடைப்பை சரிசெய்த பொதுப்பணித்துறையினர்
திருத்தணி அருகே ஏரி உடைப்பை மணல் மூட்டைகளை அடுக்கி பொதுப்பணித்துறையினர் சரி செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா கனகம்மா சத்திரம் அருகே ராமாபுரம் கிராமத்தில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் அதிகப்படியான நீர்வரத்து இருந்ததால் ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா, தாசில்தார் ஜெயராணி ஆகியோர் விரைந்து சென்று ஏரியை பார்வையிட்டனர்.
இதுகுறித்து பொதுப்பணி துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக அந்தப் பகுதிக்கு வந்து உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்தனர். இதையடுத்து வீரராகவபுரம், மதுரா புளியங்கொண்டா, ராஜ பத்மா புரம் இருளர் காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மழையினால் பாதிக்கப்பட்ட 95 இருளர் இன குடும்பங்களுக்கு இலவச அரிசி, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, கோதுமை மற்றும் அத்தியாவசிய பொருட்களை திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா வழங்கினார்.
Related Tags :
Next Story