ஓட்டப்பிடாரம் அருகே சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர் திடீரென இறந்து போனார்
ஓட்டப்பிடாரம் அருகே சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர் திடீரென இறந்து போனார்
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் தெற்கு காலனியைச் சேர்ந்த பாலகணேசன் மகன் மகேஸ்வரன் (வயது 13). அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் கனமழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் மகேஸ்வரனும், நண்பர்கள் இருவரும் சேர்ந்து ஒரே சைக்கிளில் ஓட்டப்பிடாரத்தில் உள்ள தனது நண்பரைப் பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது ஓட்டப்பிடாரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது திடீரென மகேஸ்வரன் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி கீழே விழுந்துள்ளார். சிறிது நேரம் கை, கால்களை உதறியவர் மயங்கி விட்டாராம். உடனிருந்த நண்பர்கள் அருகில் இருந்தவர்களிடம் தண்ணீரை வாங்கி முகத்தில் தெளித்தும் அவர் மயக்கம் தெளியவில்லையாம். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினராம். தகவல் அறிந்த பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story