மசினகுடி அருகே மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மசினகுடி அருகே மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Nov 2021 8:56 PM IST (Updated: 30 Nov 2021 8:56 PM IST)
t-max-icont-min-icon

மசினகுடி அருகே மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கூடலூர்

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மின் ஊழியர்களின் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. 

இதன்படி நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே சிங்காரா பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு குழு தலைவர் லாசர் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், சிங்காரா தலைவர் சாலி, சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். 

ஆர்ப்பாட்டத்தில் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story