எம்.ஆர்.சி. தினத்தையொட்டி இருசக்கர வாகன பேரணி


எம்.ஆர்.சி. தினத்தையொட்டி இருசக்கர வாகன பேரணி
x
தினத்தந்தி 30 Nov 2021 8:56 PM IST (Updated: 30 Nov 2021 8:56 PM IST)
t-max-icont-min-icon

எம்.ஆர்.சி. தினத்தையொட்டி இருசக்கர வாகன பேரணி

ஊட்டி

எம்.ஆர்.சி. தினத்தையொட்டி வெலிங்டனில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இருசக்கர வாகன பேரணி கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

இருசக்கர வாகன பேரணி

மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் (எம்.ஆர்.சி.) இந்திய ராணுவத்தில் பழமை வாய்ந்தது. குன்னூர் அருகே வெலிங்டனில் எம்.ஆர்.சி. ராணுவ பயிற்சி மையத்தில் இளம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற இளம் ராணுவ வீரர்கள் சத்தியபிரமாணம் செய்து வைக்கப்பட்டு, எல்லைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். 

இந்த நிலையில் நேற்று வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் மெட்ராஸ் ரெஜிமென்டின் 263-வது தினத்தை நினைவு கூறும் வகையில் இருசக்கர வாகன பேரணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பேரணியை ஸ்வர்ணம் விஜய் வர்ஸ், ஆசாதி கா அம்ரித் மகாட்சவ் பிரிகேடியர் அஜித்சிங் (ஓய்வு) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்துக்கு சென்று அடைவார்கள். பின்னர் கொல்கத்தா, ஜாம்நகர், சென்னை மற்றும் செகந்திராபாத் ஆகிய இடங்களில் இருந்தும்,

 இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் மெட்ராஸ் ரெஜிமென்ட் பட்டாலியன்களில் இருந்தும் இருசக்கர வாகன ஓட்டிகள் பேரணியில் இணைகின்றனர்.இந்திய ராணுவத்தின் பழமையான படைப்பிரிவின் 263-வது எழுச்சி நாளான வருகிற டிசம்பர் 4-ந் தேதி திருவனந்தபுரத்தில் ஒன்று கூடுவார்கள்.

விருது பெற்றவர்கள்

லெப்டினன்ட் ஜெனரல் மஜிந்தர் சிங் மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் கர்னல் ஆப் தி மெட்ராஸ் ரெஜிமென்ட் ஆகியோரால் இருசக்கர வாகன ஓட்டிகளின் பேரணி கொடி ஏற்றுக்கொள்ளப்பட உள்ளது. இந்த விழாவில் கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது வீர விருது பெற்றவர்கள், வீர் நாரிஸ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கவுரவிக்கப்பட உள்ளனர்.

இருசக்கர பேரணியில் திருவனந்தபுரம் செல்லும் வழியில் முன்னாள் படை வீரர்கள், துணிச்சல் விருது பெற்றவர்கள் உள்ளிட்டோரை சந்தித்து அவர்களுடன் உள்ள பிணைப்பை மீண்டும் நிலை நாட்டுவார்கள். இது இந்திய ராணுவ படை ரெஜிமென்டுகளில் முதன் முறையாக நடைபெறும் தனித்துவமான செயலாகும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story