விவசாயிகள் தரையில் உட்கார்ந்து தர்ணா


விவசாயிகள் தரையில் உட்கார்ந்து தர்ணா
x
தினத்தந்தி 30 Nov 2021 9:19 PM IST (Updated: 30 Nov 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் தரையில் உட்கார்ந்து தர்ணா

உடுமலை,
உடுமலையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இடம் பற்றாக்குறையால் உட்கார இடம் கிடைக்காத விவசாயிகள் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
 கூட்டம்
உடுமலைமற்றும் மடத்துக்குளம் தாலுகாக்கள் உள்ளடங்கிய விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் ஆர்.டி.ஓ.அலுவலக தரைத்தளத்தில் தொடங்கியது.கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ..கீதா தலைமை தாங்கினார். தாசில்தார் ராமலிங்கம், மடத்துக்குளம் தாசில்தார் சைலஜா, ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணைபோலீஸ் சூப்பிரெண்டு ஆர்.தேன்மொழிவேல், இன்ஸ்பெக்டர் ராஜாகண்ணன், வனச்சரக அலுவலர் தனபாலன், விவசாயிகள் எஸ்.ஆர்.மதுசூதனன், ஏ.பாலதெண்டபாணி, வெ.ரங்கநாதன், மவுனகுருசாமி, செந்தில்குமார், சிக்கனூத்துமனோகரன், ஜல்லிபட்டிகோபால், நல்லப்பன், ஜா.சாதிக்பாட்சா, எம்.மூர்த்தி, எம்.குணசேகரன் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் உட்காருவதற்கு போதிய இடவசதி இல்லாததால் அலுவலக ஊழியர்கள் பணியாற்றும் அறையில் விவசாயிகள் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போதிய இடவசதி உள்ள இடத்தில் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து  அரசுகலைக்கல்லூரியில் கல்லூரியின் கூட்ட அரங்கில் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பின்னர் அரசு கலைக்கல்லூரியில் கல்லூரியின் கூட்ட அரங்கில் ஆர்.டி.ஓ.கீதா தலைமையில் தொடர்ந்து கூட்டம்நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பேசினர்.
 பயிர்கள் சேதம்
அப்போது விவசாயிகள் பேசியதாவது:-
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்கடன் பெற்ற விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடியில் அடங்கலில் விதி மீறல் உள்ளது என்று கூறி 3ஆயிரத்து 184 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க மறுக்கிறார்கள்.  அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.  அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில்  புதிய எந்திரங்களை நிறுவி ஆலையை புனரமைக்க வேண்டும். மழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும்.  விருகல்பட்டி, அணிக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப்பன்றிகள், பயிர்களை சேதப்படுத்துகின்றன. அதனால் காட்டுப்பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு
உப்பாறு அணைக்கு செல்லும் நீர்வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.ஏ.பி.கால்வாய்களை தூர் வார வேண்டும். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்துஅரசு துறை அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும். மேற்கண்டவாறு விவசாயிகள் பேசினர்.விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்தனர்.

Next Story