மயிலம் ஒன்றியத்தில் மழை வெள்ள சேதங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
மயிலம் ஒன்றியத்தில் மழை வெள்ள சேதங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய்மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
மயிலம்
பலத்த மழை
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் மிதமான மற்றும் பலத்த மழையும், சில இடங்களில் அதிகன மழையும் பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் விழுப்புரம், திண்டிவனம், மயிலம், செஞ்சி, மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மயிலம் ஒன்றியத்தில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியதால் பயிர்கள் சேதம் அடைந்தன.
அதிகாரிகளுக்கு உத்தரவு
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய்மீனா நேற்று முன்தினம் மயிலம் ஒன்றியம் ரெட்டணை, அகூர், கொல்லியங்குணம் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளையும், சேதம் அடைந்த பயிர்களையும் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். அப்போது மழை நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களுக்கு அளவீடு செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், வேளாண்மை இணை இயக்குனர் ரமணன், துணை இயக்குணர் பெரியசாமி, தாசில்தார் வசந்த கிருஷ்ணன், துணை தாசில்தார் மோகனபிரியா, வேளாண்மை உதவி இயக்குனர் மகாலட்சுமி, வேளாண்மை அலுவலர் ஆனந்தன், கொல்லியங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி வர்ணமுத்து மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story