பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டம்


பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 30 Nov 2021 10:08 PM IST (Updated: 30 Nov 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை தமிழக அரசு குறைக்கக்கோரி நாகையில், பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளிப்பாளையம்:
பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை தமிழக அரசு குறைக்கக்கோரி நாகையில், பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனித சங்கிலி போராட்டம்
நாகை அவுரித்திடலில் பா.ஜ.க சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு நாகை மாவட்ட பட்டியல் அணி ்தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். பா.ஜ.க மாவட்ட தலைவர் நேதாஜி முன்னிலை வகித்தார். 
இதில் மாநில செயலாளர் தங்க.வரதராஜன், நகரத்தலைவர் இளஞ்சேரலாதன், நகர பொதுச்செயலாளர் அறிவழகன் மற்றும் அமைப்பு சாரா மாவட்ட துணைத்தலைவர் ரவிச்சந்திரன், தொழிலாளர் பிரிவு மாவட்ட தலைவர் இளமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
வாட்வரியை குறைக்க வேண்டும்
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசு  வாட் வரியை குறைக்கவில்லை. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

Next Story