சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்


சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Nov 2021 10:14 PM IST (Updated: 30 Nov 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், டிச.1-
காலமுறை ஊதியத்துடன் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி நாமக்கல்லில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட தலைவர் அருள்பிரகாசம், மாவட்ட பொருளாளர் பழனிவேல், சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்ட பொருளாளர் அப்துல் ரஜின், தமிழ்நாடு சுகாதார அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் மனோஜ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் இளவேந்தன் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் இளைய சுகாதார ஆய்வாளர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் மீண்டும் பணி வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், சுகாதார ஆய்வாளர்களுடன் தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. முடிவில் சங்க நிர்வாகி கார்த்திக் நன்றி கூறினார்.

Next Story