போடியில் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை


போடியில் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 30 Nov 2021 10:24 PM IST (Updated: 30 Nov 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

போடியில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

போடி:
போடி மின்வாரிய அலுவலகம் அருகே வசிப்பவர் இருளாண்டி. இவரது மனைவி விஜயா. இவர்களது  இளைய மகள் ஜனனி (வயது14). இவர்  போடியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் இருளாண்டிக்கும், விஜயாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. தினசரி அவர்கள் வாக்குவாதம் செய்ததை பார்த்து ஜனனி மனமுடைந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 
இதுகுறித்து தகவல் அறிந்த போடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஜனனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story