வளவனூர் அருகே அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு


வளவனூர் அருகே  அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு
x
தினத்தந்தி 30 Nov 2021 10:31 PM IST (Updated: 30 Nov 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

வளவனூர் அருகே அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு


வளவனூர்

வளவனூர் அருகே ஓட்டேரிபாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மழையின் காரணமாக கடந்த 25-ந் தேதி விடுமுறை விடப்பட்டதை அடுத்து ஊழியர்கள் பள்ளியை பூட்டி விட்டு சென்றனர். பின்னர் நேற்று காலை பள்ளிக்கூடத்தை திறக்க வந்த ஊழியர்கள்அலுவலக அறைக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த கம்ப்யூட்டரை காணவில்லை.  இதுகுறித்து உதவி தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து கம்ப்யூட்டரை திருடிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார். 

Next Story