வேப்பனப்பள்ளி அருகே நெல் வயலில் பதுங்கி இருந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
தினத்தந்தி 30 Nov 2021 10:40 PM IST (Updated: 30 Nov 2021 10:40 PM IST)
Text Sizeவேப்பனப்பள்ளி அருகே நெல் வயலில் பதுங்கி இருந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள பெரிய சூலமலை கிராமத்தில் சிவா என்பவரது வயலில் நெல் அறுவடை செய்யும் பணியில் நேற்று விவசாயிகள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வயலில் 10 அடி நீள மலைப்பாம்பு நெற்கதிருக்குள் பதுங்கி இருந்தது. மலைப்பாம்பை கண்ட தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அலுவலர்கள் அன்பரசன், சண்முகசுந்தரம், ராமன், சுப்ரமணி ஆகியோர் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து மகாராஜகடை வனப்பகுதியில் விட்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire