பாலத்தை சிதைத்த மழை வெள்ளம்
மழை வெள்ளம் பாலத்தை சிதைத்தது.
தொண்டி,
திருவாடானை தாலுகா மாணிக்கங்கோட்டை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் இங்குள்ள மணிமுத்தாறு ஆற்றை கடந்து செல்லவேண்டும். இதனால் இக் கிராமத்தில் இருந்து தேவகோட்டை- ஓரியூர் சாலை, கடம்பூர் வழியாக கண்ணங்குடி, ஆண்டாவூரணி, மங்கலக்குடி பகுதிக்கு செல்வதற்காக ஆற்றில் 2 பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தொடர் மழையால் இங்குள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமானதால் பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தற்போது தண்ணீர் குறைந்து ஒரு பாலத்தில் மட்டும் பாலத்திற்கு கீழ் தண்ணீர் சென்று கொண்டு உள்ளது. மழைவெள்ளத்தில் கடம்பூர் செல்லும் பாலம் சிதைந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். உடனடியாக இந்த பாலத்தை சீரமைத்து போக்குவரத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story