மாடுகள் திரிந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


மாடுகள் திரிந்தால் உரிமையாளர்களுக்கு  ரூ.10 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 1 Dec 2021 12:02 AM IST (Updated: 1 Dec 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

கண்டனூர் பேரூராட்சி பகுதி சாலையில் மாடுகள் திரிந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கை, 
கண்டனூர் பேரூராட்சி பகுதி சாலையில் மாடுகள் திரிந்தால் உரிமையாளர்களுக்கு  ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இடையூறு
கண்டனூர் பேரூராட்சி செயல் அலுவலர் உமாமகேசுவரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான மாடுகளை, அவரவர் வீடுகளில் கட்டிவைத்து பராமரிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது. 
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடை யூறாக சுற்றித் திரியும் கால்நடைகள் கண்டறியப்பட்டால் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் பாதுகாப்பாக பிடித்து  அடைக்கப் படுவதோடு உரிமை யாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். கால்நடைகளை பராமரிப்பதற்கு, பராமரிப்புக் கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூ.500 வசூலிக்கப்படும். 
அபராதம்
பேரூராட்சி மூலம் பிடித்து வைக்கப்பட்ட கால்நடைகளை 7 நாட்களுக்குள் அபராதம் செலுத்தி உரிமையாளர்கள் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் மேற்படி கால்நடைகளை புளூகிராஸ் சொசைட்டி அல்லது அருகில் உள்ள கோசாலையில் ஒப்படைக்கப்படும். எனவே, பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை வீட்டில் வைத்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story