மனைவி, பிள்ளைகள் கண்எதிரே ஏரி நீரில் அடித்துச்செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி கதி என்ன

மனைவி, பிள்ளைகள் கண்எதிரே ஏரி நீரில் அடித்துச்செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி கதி என்ன
x
தினத்தந்தி 1 Dec 2021 12:18 AM IST (Updated: 1 Dec 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

வெம்பாக்கத்தில் மனைவி, பிள்ளைகள் கண் எதிரே ஏரி உபரிநீரில் மாற்றுத்திறனாளி அடித்துச்செல்லப்பட்ட நிலையில் அவரது கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.

தூசி

வெம்பாக்கத்தில் மனைவி, பிள்ளைகள் கண் எதிரே ஏரி உபரிநீரில் மாற்றுத்திறனாளி அடித்துச்செல்லப்பட்ட நிலையில் அவரது கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. 

மாற்றுத்திறனாளி

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் சி.எஸ்.எம் தெருவை சேர்ந்த வீராசாமி மகன் முத்து (வயது 55). மாற்றுத்திறனாளியான இவர் பட்டு நெசவு தொழிலாளியாவார். தொடர்மழையால் தற்போது வெம்பாக்கம் மாமண்டூர் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் தனது இரண்டு மனைவிகள், 2 மகன்கள், 2 மகள்களுடன் உபரிநீர் வெளியேறும் கலங்கல் அருகே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அனைவரும் ஏரியில் குளிக்க விரும்பியுள்ளனர். முத்து இறங்கியபோது அவர் கால் தவறி விழுந்து விட்டார். உபரிநீர் வேகமாக  வெளியேறிக்கொண்டிருந்ததால் அதில் அவர் தண்ணீரில்அடித்துச் செல்லப்பட்டார். 

தேடும்பணி நிறுத்தம்

தகவல் அறிந்த செய்யாறு தீயணைப்பு துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணி வரையில் தேடிவந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை தேடும் பணிைய தொடங்குவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

Next Story