லாரி மீது கார் மோதியதில் மனைவியுடன் தொழில் அதிபர் பலி


லாரி மீது கார் மோதியதில் மனைவியுடன் தொழில் அதிபர் பலி
x
தினத்தந்தி 1 Dec 2021 12:23 AM IST (Updated: 1 Dec 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே இரும்பு கம்பிகள் ஏற்றி வந்த லாரி திடீரென திரும்பியதால் பின்னால் வந்த கார் மோதியதில் மனைவியுடன் தொழில் அதிபர் பலியானார்.Businessman killed in car crash with truck

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே இரும்பு கம்பிகள் ஏற்றி வந்த லாரி திடீரென திரும்பியதால் பின்னால் வந்த கார் மோதியதில் மனைவியுடன் தொழில் அதிபர் பலியானார்.

தொழில் அதிபர்

சென்னை ஜீவன் பீமாநகர் எல்.ஐ.சி. காலனி பகுதியில் வசித்தவர் அனில்வாலியா (வயது 59). தொழில் அதிபரான இவர் பெங்களூருவில் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுவாலியா (50). பெங்களூருவில் இருந்த அனில்வாலியாவும் அவரது மனைவியும் நேற்று சொகுசு காரில் சென்னைக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.அந்த கார் நேற்று மதியம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஓசூரில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது.

திடீரென திருப்பினார்

லாரியை டிரைவர் நித்தியானந்தன் ஓட்டி வந்தார். மதியம் 2.55 மணியளவில் ஆத்தூர்குப்பம் அருகே வந்தபோது செல்போனுக்கு கடையில் ரீசார்ஜ் போடுவதற்காக லாரியை டிரைவர் நித்தியானந்தன் எந்த ஒரு சிக்னலும் செய்யாமல் திடீரென இடதுபுறமாக திருப்பி உள்ளார்.
அப்போது பின்னால் காரை ஓட்டி வந்த அனில் வாலியா இதனை கவனிக்கவில்லை. திடீரென லாரி திரும்பியதால் பிரேக் போட்டு அவர் காரை நிறுத்த முயன்றார். ஆனால் கார் நிற்காமல் லாரி மீது பயங்கரமாக மோதியது. 
மனைவியுடன் தொழில் அதிபர் பலி

இதில் அப்பளம் போல் கார் நொறுங்கியதில் காரை ஓட்டிச் சென்ற அனில் வாலியா மற்றும் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த அவரது மனைவி மஞ்சுவாலியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் உள்பட போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு இருவரது உடல்களையும் மீட்டு வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்  விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் நித்தியானந்தத்தை அவர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story