பாணாவரம் அருகே பள்ளியை சூழ்ந்த மழைநீர்


பாணாவரம் அருகே பள்ளியை சூழ்ந்த மழைநீர்
x
தினத்தந்தி 1 Dec 2021 12:34 AM IST (Updated: 1 Dec 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

பாணாவரம் அருகே பள்ளியை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மாணவர்களை அனுப்ப பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.

நெமிலி

பாணாவரம் அருகே பள்ளியை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மாணவர்களை அனுப்ப பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.
செயல்படத் தொடங்கின

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த அரங்காபும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் லட்சுமிபுரம், ரசூல்பேட்டை, மாங்குப்பம் மற்றும் அரங்காபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. தொடர்மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நேற்று முதல் பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

பெற்றோர்கள் கோரிக்கை

பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் பாம்பு மற்றும் விசபூச்சிகளின் நடமாட்டம் இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு அனுப்ப முடியாமல் அச்சத்துடன் உள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story